ராணிப்பேட்டை: பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் எனத் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து முதற்கட்ட தேர்தலை நடத்திவருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 6) முதல்கட்டமாக ஆற்காடு, திமிரி, வாலாஜா ஒன்றியங்களில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 653 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்றுவருகிறது.

இவற்றில் 196 மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமராக்கள், தேர்தல் நுண் பார்வையாளர்கள் வாக்குப்பதிவைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட வாக்குப்பதிவுப் பணியில் ஐந்தாயிரத்து 293 தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். சுமார் ஆயிரத்து 861 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
scope of ai in future