ஆற்காட்டில் புதுப்பெண்ணிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

ஆற்காட்டில் புதுப்பெண்ணிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
X
ஆற்காட்டில் புதிதாக திருமணமமான பெண்ணிடம் 10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வெங்கடாஜலபதி நகரைச்சேர்ந்தவர் ஆனந்தராஜ், ஆற்காட்டில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையை நடத்திவரும் இவருக்கும் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகத் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு அந்தப் பெண் கணவருடன் ஆற்காட்டில் வசித்துவருகிறார்

இந்நிலையில் அந்த பெண் திருமணத்திற்கு முன்பாக பேர்ணாம்பட்டைச் சேர்ந்த சமீர் அகமது(23) என்பவனிடம் நட்பு ரீதியாக சகஜமாக பழகி வந்துள்ளார். அதனை சாதகமாக்கிக் கொண்ட சமீர் அகமது, இளம்பெண்ணுடன் சேர்ந்திருப்பது போன்ற புகைப்படங்களை அடிக்கடி எடுத்து வைத்துள்ளான். அதனையடுத்து சமீர் அகமது , திருமணமாகி கணவருடன் இருந்து வரும் அந்த பெண்ணிடம் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு தன்னிடம் வந்து விட வேண்டும் என்றும் அல்லது 10 லட்சம் தரவேண்டும் என்று அப்பெண்ணுடன் சேர்த்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களைக் காட்டி தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளான். அதன் காரணமாக மனஉளைச்சலாகி அவரது கணவர் ஆனந்தராஜிடம் கூறி அழுதுள்ளார் ..

அதனைத் தொடர்ந்து ஆனந்தராஜ் ஆற்காடு டவுன் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் பேர்ணாம்பட்டிலிருந்த சமீர் அகமதுவை பிடித்து கைது செய்து சிறையிலடைத்தனர.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!