இராணிப்பேட்டை: திமிரி அருகே இடி தாக்கி இளம் பெண் பலி

இராணிப்பேட்டை: திமிரி அருகே இடி தாக்கி இளம் பெண் பலி
X
திமிரி அடுத்த வெள்ளகுளத்தில் இடி தாக்கி, இளம் பெண் பலியானார்.

இராணிப்பேட்டை மாவட்டம், அற்காடு அடுத்த வெள்ளகுளத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். தனியார் பஸ்ஸில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். அவரது மகள் சொர்ணலதா (21) ,பிசிஏ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில், வெள்ளகுளத்தில் மதியம் மழை பெய்யத் தொடங்கியது. எனவே வெளியே கட்டி இருந்த மாட்டை அவிழ்த்து உள்ளே கட்டுவதற்காக சொர்ணலதா வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது அவர்மீது இடி தாக்கியது. இதனால் அவர் பலத்த காயமடைந்தார்.

உடனே அவரை ஆற்காடு அருகே உள்ளே தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பலனின்றி சொர்ணலதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, திமிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!