குட்டையில் துணி துவைத்தபோது நீரில் மூழ்கி பெண் உயிரிழப்பு

குட்டையில் துணி துவைத்தபோது நீரில் மூழ்கி பெண் உயிரிழப்பு
X
ரத்தினகிரி நந்தியாலத்தில் உள்ள கல்குவாரி குட்டை நீரில் முழ்கி பெண் உயிரிழந்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி அடுத்த நந்தியாலம் அருகே குறிஞ்சி நகர் பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கல்குவாரி குட்டை உள்ளது. அதில், அதே பகுதியை சேர்ந்த இந்திரா என்பவர் துணி துவைப்பதற்காக சென்றார். இரவு ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை .

அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், இந்திராவை இரவு முழுவதும் தேடிவந்துள்ளனர். இருப்பினும் கிடைக்கவில்லை. ரத்தனகிரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். புகாரின்பேரில் தேடிவந்த போலீசார் அங்குள்ள கல்குட்டையில் தேட, ஆற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். .

தீயணைப்பு மீட்பு படையினர், கல்குட்டையில் இந்திராவைத் தேடும்பணியில் பணியில் ஈடுபட்டனர் . சுமார்4 மணிநேர தேடுதலுக்குப் பிறகு, குட்டையில் இருந்து சடலமாக இந்திரா மீட்கப்பட்டார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரத்தினகிரி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!