கள்ளத்தொடர்பு வெளியில் தெரிந்ததால் தூக்கிட்டு தற்கொலை

கள்ளத்தொடர்பு வெளியில் தெரிந்ததால் தூக்கிட்டு தற்கொலை
X

திமிரி அருகே தற்கொலை செய்து கொண்டவர்கள்

திமிரியருகே கணவனின் நண்பருடன் ஏற்பட்ட கள்ளத் தொடர்பு வெளியில் தெரிந்ததால் கள்ளகாதலனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், கொத்தனார் அவரது மனைவி சரிதா. இருவருக்கும் சரண்யா(19) என்ற மகளும், பாலா என்ற மகனும் உள்ளனர் அதில் சரண்யாவுக்கு திருமணமாகி கணவருடன் உள்ளார்.

அதேபோல,ராஜேந்திரனின் நண்பரான வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி(36). அவருக்கு திருமணமாகி நந்தினி(5), ஷாலினி(3) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ராஜேந்திரனின் மனைவியான சரிதா அவ்வப்போது கணவருடன் சித்தாள் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது பாரதியுடன் சரிதா நட்பாக பழகி பின்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இது குறித்து ராஜேந்திரன் தொடர்ந்து மனைவியை கண்டித்து வந்தததாக கூறப்படுகிறது

.எனவே, மனமுடைந்த சரிதாவும், பாரதியும் வெள்ளக்கு ளம் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் புடவையைக் கொண்டு இருவரும் ஜோடியாக வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனைக் கண்ட அப்பகுதியினர் தெரிவித்த தகவலின் பேரில், திமிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு வேலூர்அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு போலீஸார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!