உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றது சமூக மாற்றத்தின் துவக்கம்: விசிக
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை வாழ்த்தி கௌரவிக்கும் விதமாக அக்கட்சியின் கிழக்கு மாவட்டம் சார்பில் பாராட்டு விழா ஆற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவில் இராணிப்பேட்டை மாவட்ட விசிக செயலாளர் குண்டா சார்லஸ் தலைமை வகித்தார், அரக்கோணம் நாடாளுமன்ற செயலாளர் ரமேஷ்கர்ணா வரவேற்றார். மாந்தாங்கல் ராஜா, பெல்சேகர், ஆகியோர் வரவேற்புரையாற்றினார் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில பொது செயலாளரும் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி உள்ளாட்சியில் வெற்றிபெற்ற 1பஞ்.தலைவர் மற்றும் திருநங்கை ஒருவர் உட்பட 21 பஞ். வார்டு உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்தி, வெற்றி நினைவு கேடயங்களை பரிசாக வழங்கி பாராட்டினார் .
பின்னர் அவர் விழாவில் , திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பொது மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்ட நிலையில், அதற்கான முன்னெடுப்புகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எடுத்துவருவதாக தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இடஒதுக்கீட்டின்படி நிரப்பப்படாத காலியிடங்கள் கணக்கெடுத்து அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளோம். மேலும் ,அவர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதில் மக்களிடம் வேட்பாளர்கள் கொண்டுள்ள பிணைப்பு முக்கிய காரணமாகும்.
உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பெற்றுள்ள வெற்றியானது சட்டமன்ற தேர்தலில் பெறும் வெற்றியை காட்டிலும் பெரியது எனவே வெற்றியடைந்தவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட வேண்டும் . இதுவே சமூக மாற்றத்திற்கான துவக்கமாகும் என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அனைத்து நகர, பேரூர் மற்றும் ஊரக பகுதி நிர்வாகிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ,
முன்னதாக விசிகட்சியினர் ஊர்வலமக சென்று ஆற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சி்லைக்கு மாலையணிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu