ஆற்காடு ஒன்றியம் 8வது வார்டில் நான்குமுனை போட்டி

ஆற்காடு ஒன்றியம் 8வது வார்டில் நான்குமுனை போட்டி
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக, அதிமுக, மற்றும் 2 சுயேச்சைகள் போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் பிரேமாவும், திமுக சார்பில் சுலோச்சனா சண்முகமும் களமிறங்கியுள்ளனர்.

சுயேட்சையாக மங்களம் மற்றும் உமாராணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த வார்டில் திமுக, அதிமுக இடையே கடும்போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story