பள்ளிக்கட்டிடம் பழுதடைந்துள்ளதால் வகுப்பறையை புறக்கணித்த மாணவர்கள்

வகுப்பை புறக்கணித்து பெற்றோருடன் வெளியே வரும் மாணவர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இரத்தினகிரி அருகே கன்னிகாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது . 1972ல் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் தற்போது சிதலமடைந்துள்ளது.
இந்நிலையில் , கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 2020லிருந்து பள்ளி மூடப்படிருந்தது. நோய்த்தொற்று தற்போது குறைந்து வருவதால் பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு அனுமதித்தது.
இதுகு றத்து ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பள்ளிக்கட்டிடங்களின் உறுதித்தன்மைகுறித்து ஆய்வு செய்து அறிக்கையை முன்கூட்டி சமர்ப்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். .இருப்பினும். அதிகாரிகள் மெத்தனமாக இருந்துள்ளனர்
இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வந்தனர். அவர்களை சிதிலமடைந்து பாதுகாப்பின்றி உள்ள வகுப்பறையில் ஆசிரியர்கள் அமரவைத்துள்ளனர். அப்போது மாணவர்களுடன் வந்த பெற்றோர் பள்ளி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வகுப்பறையை புறக்கணித்து பள்ளிக்கு பூட்டு போட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த ரத்தனகிரி காவல்துறை மற்றும் வட்டார கல்வி அலுவலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில்150 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு போதிய சமூக இடைவெளியுடன் கூடிய பள்ளி கட்டிடம் இல்லாததால் புதிய கட்டிடம் கட்ட வேண்டுமெனவும், பாதுகாப்பற்று உள்ளத பழைய கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடங்களைக் கட்டித் தரவேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu