ஆற்காடு ஒன்றியம் 12வது வார்டில் ஆறு பேர் போட்டி

ஆற்காடு ஒன்றியம் 12வது வார்டில் ஆறு பேர் போட்டி
X
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் 12வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆறு வேட்பாளர்கள் போட்டி

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஆறு பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் ரவி. திமுக சார்பில் கஜபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், அமமுக சார்பில் அருள், நாம் தமிழர் சார்பில் ஜெயராமன், பாமக சார்பில் ராஜா ஆகியோரும் சத்தியானந்தம் என்பவர் சுயேச்சையாக போட்டியிட இந்த வார்டில் ஆறு முனை போட்டி நிலவுகிறது.

ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வார்டு முழுவதும் பிரச்சாரம் அனல் பறக்கிறது.

Tags

Next Story
ai marketing future