ஆற்காட்டில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரிசி சிப்பம் : அ.தி.மு.க பிரமுகர் வழங்கல்

ஆற்காட்டில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரிசி சிப்பம் :  அ.தி.மு.க பிரமுகர் வழங்கல்
X

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காட்டில் அதிமுக பிரமுகர் சாரதி அரிசி சிப்பம் வழங்கினார். ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி உடன் இருந்து வழங்கினார்.

ஆற்காட்டில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரிசி சிப்பத்தை அதிமுக வர்த்தக செயலாளர் சாரதி வழங்கினார்.

ஆற்காட்டில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அதிமுக வர்த்தக அணி செயலாளர் சாரதி அரிசி சிப்பம் வழங்கினார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலுள்ள மாசாப்பேட்டைப் பகுதியில் கொரோனா ஊரடங்கில் அரசு அறிவித்துள்ள தடை உத்தரவுகள் காரணமாக வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரமிழந்து நலிவடைந்த நிலையில் பலர் இருந்து வருவதாக அதேப்பகுதியில் இருந்து வரும் அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாரதிக்கு தெரிய வந்தது.

அதனைத்தொடர்ந்து அவர் இன்று ₹ 1 லட்சம் மதிப்பிலான அரிசி வாங்கி 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார். ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக வந்து அரிசி சிப்பத்தை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சில தேவைகளையும் சாரதியிடம் நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர். அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!