/* */

குற்றங்களை தடுக்க "சேர்வோம் எழுவோம்": புதிய ரோந்து முறை அறிமுகம்.

ஆற்காட்டில் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் "எழுவோம் சேர்வோம்" என்ற புதிய ரோந்து முறையை எஸ்பி தீபாசத்தியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

குற்றங்களை தடுக்க சேர்வோம் எழுவோம்: புதிய ரோந்து முறை அறிமுகம்.
X

எஸ்பி தீபா சத்யன் ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்­டத்­தில்பொது ­மக்­க­ள்,போலீஸாரிடையே உள்ள நல்­லு­றவு ஏற்பட்டு குற்றங்களை தடுக்கும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளில் இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருகிறது . அதன் அடிப்படையில்,சமூக காவ­லில் ஈடு­பட்டு குற்றங்­கள் நிக­ழாமல் தடுக்­கும் விதமாக பிரத்­யேகமான ரோந்து முறைகளை போலீஸார் பின்பற்றி வருகின்றனர்.

அதில், கிரா­மிய விழிப்­பு­ணர்வு குழுக்கள், ரோந்து கண்­கா­ணிப்பு, மின் அமைப்பு, சட்டையில் கேமிரா பொருத்திய ரோந்து போன்றவை நவீ­னப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் ரோந்து அமைப்பானது கருடா சிறப்பு ரோந்துமுறை துவங்­கப்­பட்டு நடை­மு­றையில் இருந்து வருகிறது.

அதனைத்தொடர்ந்து "சேர்­வோம், எழு­வோம்" என்ற புதிய ரோந்துமுறை ஆற்காட்டிலுள்ள திருமண மண்டபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார், டிஎஸ்பி பிரபு முன்னிலை வகித்தார்.

மாவட்ட எஸ்பி தீபா சத்யன் கலந்து கொண்டு ரோந்துசெல்லும் காவலர்களுக்கு புதிய ரோந்து முறை குறித்து விளக்கினார் . பின்பு ரோந்து வாகனங்களை கொடியசைத்து துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஆற்காடு, இராணிப்பேட்டை, மற்றும் திமிரி காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்,மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Sep 2021 2:24 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 2. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 3. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 4. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 5. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...
 6. லைஃப்ஸ்டைல்
  Leukemia meaning in Tamil -இரத்தம், எலும்பு மஜ்ஜையை சிதைக்கும்...
 7. விளையாட்டு
  சார்பட்டா பரம்பரை: வடசென்னையின் குத்துச்சண்டை மரபு
 8. சிங்காநல்லூர்
  ‘பாஜக பொய் பிரச்சாரத்தை காலி செய்த ராகுல் -ஸ்டாலின்’-அமைச்சர்
 9. ஆன்மீகம்
  இந்திய பெருமைகளில் ஒன்றான தஞ்சை பெரிய கோவில் பற்றி தெரிந்துக்...
 10. திருப்பூர்
  தபால் வாக்குகளை செலுத்திய அரசு அதிகாரிகள்