எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதை தடுக்கப் போராட்டம்

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதை மக்கள் ஆதரவோடு தடுத்து நிறுத்துவோம் என காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கோட்ட தலைவர் கூறினார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்வதை தடுக்கப் போராட்டம்
X

எல்ஐசி ஊழியர் சங்க கோட்ட தலைவர் ராமன்

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்து காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கோட்ட தலைவர் ராமன் கூறுகையில், 2017– 22 வரை மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஐந்து ஆண்டு திட்டங்களுக்கு ஆண்டுகளில் 7 லட்சம் கோடி ரூபாயை எல்.ஐ.சி., நிறுவனம் அரசுக்கு அளித்துள்ளது. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., யின் பங்குகளை சட்டத்திருத்தங்கள் செய்து தனியாருக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்காக பாராளுமன்றத்தில் எல்.ஐ.சி., சட்டத்தில் சில ஷரத்துக்களை திருத்தியுள்ளது. தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து பெரு முதலாளிகள் லாபம் பெற பங்குகள் விற்கப்படுகின்றது.

இது பாலிசி தாரர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான செயல் என்பதால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இதை கண்டிக்கிறது. தனியார் நிறுவனங்களின் செயல்பாடு மக்கள் சார்ந்ததாக எப்போதும் இருந்தது இல்லை . தனியாருக்கு சென்றால் பங்கு, லாபம், போனஸ் குறைந்துவிடும் எல்.ஐ.சி., தற்போது வரை மக்களுக்கு அட்சய பாத்திரம் போல விளங்குகிறது. தனியார் மயமானால் மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்க முடியாமல் போகும். இதனால் வளர்ச்சிப்பணிகளின்றி மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும்.

மேலும் பங்குகளை விற்பது குறித்து காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம், எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள் கருத்துக்களை மத்திய அரசு கேட்கவில்லை. 1994 ம் ஆண்டு காங்., ஆட்சியில் அமைக்கப்பட்ட மல்கோத்ரா கமிட்டி 50 சதவீதம் எல்.ஐ.சி., பங்குகளை விற்கலாம் என்று கூறியது. மக்கள் ஆதரவோடு ஊழியர் சங்கத்தால் இந்த சட்டம் நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. எல்.ஐ.சி., யின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 30 லட்சம் கோடி ரூபாயாகும். இன்றைய மார்க்கெட் மதிப்பு கணக்கிட முடியாத படி பல மடங்கு அதிகம். எனவே அழிவிலிருந்து எல்.ஐ.சி., யை காப்பாற்ற இந்த சட்டம் திரும்ப பெறும் வரை மக்களின் கருத்துக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்.

ஆந்திரா மாநிலம், ஹைதராபாத்தில் வரும் 3, 4 ம் தேதிகளில் நடக்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். எல்.ஐ.சி., தொடங்கப்பட்டு 65 வது ஆண்டுகள் ஆகின்றது. அதன் உதய தினம் நாளை ( செப் 1) வருகிறது. அன்று எல்.ஐ.சி., யை தனியார் மயமாக்குவதை தடுத்து நிறுத்த நாடு முழுவதும் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் கோட்ட அலுவலகம், கிளை அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இவ்வாறு அவர் நிகழ்ச்சியில் பேசினார். பேட்டியின் போது துணைத்தலைவர் பழனிராஜ், துணை செயலாளர் ரமேஷ்பாபு உடனிருந்தனர்.

Updated On: 31 Aug 2021 5:42 PM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி கலெக்டர் தலைமையில் எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  இளைஞர் அணி மாநாட்டையொட்டி திருச்சியில் தி.மு.க.வினர் சைக்கிள் பேரணி
 5. அரசியல்
  டிச. 4 துவங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள்
 6. துறையூர்
  திருச்சி அருகே துறையூரில் அமைச்சர் நேருவின் காரை மறித்த...
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Amla நோய் எதிர்ப்பு சத்துள்ள நெல்லிக்காயைச் ...
 8. ஆன்மீகம்
  Sabarimala Ayyappan Temple- சபரிமலை அய்யப்பன் கோவிலில் படிபூஜை; வரும்...
 9. லைஃப்ஸ்டைல்
  Land And Building Approval மனைகள் வாங்க மற்றும் கட்டிடம் கட்ட ...
 10. அவினாசி
  அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் சிறுத்தைகள் நடமாட்டம்; பொதுமக்கள்...