மாம்பாக்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

X
By - C.Vaidyanathan, Sub Editor |16 March 2022 9:41 PM IST
மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் மின்பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
ஆற்காடு மின்வாரிய செயற் பொறியாளர் விஜயகுமார் தெரிவித்ததாவது: வேலூர் மின்பகிர்மான வட்டம் ஆற்காடு கோட்டத்தை சேர்ந்த மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே இங்கிருந்து மின்விநியோகம் பெறும் மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu