ஆற்காட்டில் மாடியில் இருந்து விழுந்து காயமடைந்த போலீஸ்காரர் பலி

ஆற்காட்டில் மாடியில் இருந்து விழுந்து காயமடைந்த போலீஸ்காரர் பலி
X

போலீஸ்காரர் ராதாகிருஷ்ணன்.

இராணிபேட்டை மாவட்டம், ஆற்காட்டில் மாடிப்படியில் இருந்து கீழே இறங்கும்போது விழுந்து காயமடைந்த போலீஸ்காரர் உயிரிழந்தார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலூக்கா போலீஸ் ஸ்டேஷனில், திருவண்ணாமலை மாவட்டம் மைனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், (45) ,போலீஸ்காரராக பணியாற்றி வந்தார் . அவருக்கு நளினி என்ற மனைவி, 1மகன், 2மகள்கள் உள்ளனர். ராதாகிருஷணன், வேலை நிமித்தமாக ஆற்காடு பூபதி நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது மனைவி நளினி, அதே பகுதியில் உள்ள தனியார்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

மனைவி,பிள்ளைகள் பள்ளிக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ராதாகிருஷ்ணன், மாடிக்குச் சென்று கீழே படியில் இறங்கி வந்தபோது திடிரென வழுக்கி விழுந்தார். அதில், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு, ஆற்காடுஅரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ,ராதாகிருஷ்ணன் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆற்காடு டவுன் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!