ஆற்காடு அருகே டிப்பர் லாரி, கார் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

ஆற்காடு அருகே டிப்பர் லாரி, கார் மோதல்: ஒருவர் உயிரிழப்பு
X

மாதிரி படம் 

ஆற்காடு அடுத்த வேப்பூர் பைபாஸில் டிப்பர் லாரிமீது கார் மோதிய விபத்தில் ஏசி மெக்கானிக் உயிரிழந்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூரில் சென்னை ,பெங்களூரு தேசிய நேடுஞ்சாலையில் ஆற்காடு நகருக்குள் செல்லும் பைபாஸ் சாலை சந்திப்பு உள்ளது.

அதில் லாரி ஒன்று வந்து சாலை குறுக்காக கடக்க வலதுபுறம் திடிரென திரும்பியது. அப்போது சென்னையிலிருந்து வாணியம்பாடி நோக்கி வேகமாக வந்த கார் லாரிமீது மோதியது .

அதில் காரில் வந்த வாணியம்பாடியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் ராஜா(33) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஆற்காடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!