ஆற்காடு அருகே அரசு நிலம் ஆக்ரமிப்பு: ஜேசிபி,லாரி பறிமுதல்
ஆற்காடு அடுத்த புங்னூரி்ல் உள்ள அரசு நிலத்தை ஆக்ரமித்து சமன்படுத்திக்கொண்டிருந்த லாரி,ஜேசிபியை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புங்கனூரில் அரசுக்கு சொந்தான தரிசு நிலத்தில் அதேப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்நிலத்தை ஆக்கிரமித்து, அதிலுள்ள மலை போன்றவற்றை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் குடைந்தும், லாரியில் மண்அள்ளி வந்து கொட்டி சமன் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
தகவலறிந்த சப்கலெக்டர் இளம்பகவத், வட்டாட்சியர் காமாட்சி,வருவாய் ஆய்வாளர், சுரேஷ், விஏஓ சரவணன் ஆகியோருடன் அங்கு சென்று ஆக்கிரமிப்புக்குள்ளான நிலத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் அந்த தரிசுநிலம் அரசுக்குச் சொந்தமானது என உறுதி செய்தபின்னர், நிலத்தை சமன் செய்யப் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி,லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து அருகிலுள்ள திமிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் .
அனுமதியின்றி அரசுநிலத்தை கையகப்படுத்தியவர் மீது மற்றும் அதில் சமன்படுத்த உபயோகித்த ஜேசிபி,லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் ஆகியோர் மீதும் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu