முகுந்தராயபுரம் மலைப்பகுதியில் 3000 பனைவிதைகள் நட்ட இயற்கை ஆர்வலர்கள்

முகுந்தராயபுரம் மலைப்பகுதியில் 3000 பனைவிதைகள் நட்ட இயற்கை ஆர்வலர்கள்
X

முகுந்தராயபுரம் மலைப்பகுதியில் பனை விதைகளை நட்ட இயற்கை ஆர்வலர்கள்.

இராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் மலைப்பகுதிகளில் 3000 பனைவிதைகளை நட்டு இயற்கை ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த பெல் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் ராஜுதலைமையில் 'மண்ணும் மரமும்' என்ற குழு இயங்கி வருகிறது . குழுவினர் சுற்றுசூழலை பாதுகாத்து இயற்கையை பொக்கிஷங்களாக விளங்கும் மரங்களை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வருகிறது.

இந்த குழு, மாவட்டத்தின் கிராமங்கள், நகர பகுதிகளில் உள்ள பொது இடங்கள், சாலையாரங்கள் மற்றும் ஆற்றங்ரை, ஏரிக்கரைகள், குளக்கரைகள், கால்வாய்களின் ஒரம் உள்ளிட்ட பல இடங்களில் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் மலைப்பகுதியில், பெல் நிறுவன கூடுதல் பொது மேலாளர் ராஜுதலையிலான 'மண்ணும் மரமும்' குழுவைச் சேர்ந்த பெல் சேகர் உள்ளிட்ட ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் 3000க்கும் மேற்பட்ட பனை விதைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும் நட்டனர்.

மேலும், அவர்கள் பூமியில் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் பனை மரம் பெரும்பங்கு வகித்து வருகிறது. பனை மரம் முற்றிலும் மனித வாழ்விற்கு அவசியமாக உள்ளது என்று அதன் பயன்களையும் கூறினர்.

எனவே அதனை நட்டு பாதுகாத்திட வேண்டும். இயற்கையின் படைப்பில் பயன்படாத மரம் என்று எதுவும் இல்லை. எனவே மரங்களை அழிக்க நினைப்பது தவறான செயலாகும் என்ற விழிப்புணர்வுகளையும் அப்பகுதியில் ஏற்படுத்தினர்.

மேலும் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டிவரும் கூடுதல் பொது மேலாளர் ராஜு தலைமையிலான மண்ணும் மரமும் குழு தற்போது வரை 5 லட்சத்திற்கும் மேலாக பனைவிதைகள் மற்றும் தென்னைஉள்ளிட்ட ஏராளமான மரக்கன்றுகளை நட்டும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மரக்கன்று நடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மரக்கன்றுகளை தானமாக வழங்கியும் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!