விதைத்து செடிகளானவைகளை பேணிப்பாதுகாக்கும் நம்மாழ்வார் இயற்கைக்குழு
முளைத்திருக்கும் சாலையோரம் வீசப்பட்ட விதைப்பந்துகள்
இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த வாழப்பந்தலில் நம்மாழ்வார் இயற்கைக் குழுவினர் சாலையாரங்கள், ஆற்றங்கரைகள், மற்றும் பொது இடங்கள் மலைகள், வனப்பகுதிகள் உள்ளிட்ட பலஇடங்களில் சுற்று சூழலுக்குப் பயன் தரும் மரங்களை வளர்க்கும் விதமாக வேம்பு ,நுனா.,அரசன்,ஆலம்,நாகமரம், புங்கன் உள்ளிட்ட பலவற்றின் விதைகளை சேர்ந்த விதைப் பந்துகளை தொடர்ந்து வீசி வருகின்றனர்.
அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழப்பந்தல்.காவல் நிலையம் செல்லும் வழி, பச்சையப்பன் குளக்கரை, பண்ணைக் குட்டை ஓரங்கள், ஏரியின் உள்புறம் என பல இடங்களில் வீசப்பட்ட விதைப்பந்துகளில் முளைத்து பலவகைகள் செடிகளாக வளர்ந்து வருகிறது.
அவற்றைக்கண்ட நம்மாழ்குழுவினர் அனைத்தையும் பாதுகாக்கின்ற வகையில் பாரமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu