சாலையோரங்களில் விதைப்பந்துகள்: நம்மாழ்வார் இயற்கை குழு

சாலையோரத்தில் மாணவர்களை விதைப்பந்து வீசச் செய்யும் நடராஜன்
இராணிப்பேட்டை மாவட்டம் கலவையிடுத்த வாழைப்பந்தலை சேர்ந்தவர் நடராஜன், இயற்கை ஆர்வலரான இவர் நம்மாழ்வார் இயற்கைகுழு என்ற பெயரில் சமூக அக்கறையாக இயற்கை பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்.
தன்னுடன் பள்ளிமாணவர்களை இணைத்து ஏரிக்கரை,குளம்,போன்ற பொது இடங்களில் பசுமை ஏற்படுத்தும் விதமாக பனைவிதைகள் விதைப்பது, மரக்கன்றுகளை நட்டு அவற்றைப் பராமரித்து வருவது உள்ளிட்ட இயற்கை பாதுகாப்பு மற்றும் பசுமைபடுத்து செயல்களை பலஆண்டுகளாக செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது மழைக்காலம் தொடங்கியதால் சாலையோரங்கள் மலைப்பகுதிகள் மற்றும் ஆற்றங் கரைகளில் வேம்பு, நாவல், புளியம் , பூவரசு , அரசன், ஆலமரம், நுனா, இலுப்பை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டுவருகின்றனர் .
அதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக நடராஜன் தலைமையிலான நம்மாழ்வார் இயற்கை குழுவினர். வாழப்பந்தலிலிருந்து இராணிப்பேட்டை வரை தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் சுமார் 27000க்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை வீசி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu