5 ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் நல்லூர் கன்னியம்மன் கோயில் கோலாகலவிழா

5 ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் நல்லூர் கன்னியம்மன் கோயில் கோலாகலவிழா
X

சிலைகளை ஊரவலமாக கொண்டுச்சென்ற நல்லூர் கிராமத்தினர்.

கலைவையடுத்த நல்லூரில் 5 ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் எல்லைக்காவல் தெய்வம் கன்னியம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையடுத்த நல்லூர் ஏரிக்கரையில் ஊரைக்காக்கும் காவல் தெய்வமாக கன்னியம்மன் கோயில் திகழ்ந்து வருகிறது. அவ்வூர் மக்கள் கோயில் தெய்வம் கன்னியம்மனுக்கு 5ஆண்டிற்கு ஒருமுறை ஆடிமாதம் கடைசி வாரத்தில் திருவிழா பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நிலவிவரும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கிராம மக்கள் அதிகம் கூடாமல் திருவிழாவை விமரிசையாக கொண்டாடினர். விழாவில் காலை நல்லூர் கிராம மக்கள் உடையார் தெருவிலிருந்து சிலைகளை ஊரவலமாக கொண்டுச்சென்றனர்.

அப்போது, அங்குள்ள அங்காளம்மன் கோயிலில் வைத்து நேர்த்திக்கடன்களை பாரம்பரிய முறைப்படி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து ஊரவலமாக கோயிலுக்கு சென்று ஊரணிப் பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும் செய்யப்பட்டு ஆராதனைகள் நட்த்தப்பட்டது.

விழாவில் சப்த கன்னிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிதந்து அருள்பாலித்தனர். நல்லூர் கன்னியம்மன் கோயில் திருவிழா 5ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரம்பரிய முறைப்படி நடைபெறுவதால் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil