கலவையில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கலவையில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
X

கலவையில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கலவை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் துவக்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்காவில் உள்ள கிராமங்களில் மற்றும் கலவைப் பேரூராட்சியிலும் கொரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது .

இந்நிலையில் கலவையிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலவை அரிமா சங்கம் மற்றும் திமிரி, கலவை அரசு மருத்துவமனைகள் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாமை கலவை தாசில்தார் நடராஜன் தலைமையில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் துவக்கி வைத்தார். இம்முகாமில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசியும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 ஆம் கட்ட தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசியைப் பொதுக்கள் ஆர்வத்துடன் வந்துப் போட்டுக் கொண்டனர் அவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கிய எம்எல்ஏ ஈஸ்வரப்பன் தடுப்பூசியின் அவசியத்தையும், தொற்றிலிருந்து விடுபட சமூக இடைவெளி, மற்றும் முகக்கவசம் அணிய வேண்டுமென அனைவரையும் அவர் கேட்டுக்கொண்டார். அதே போல் தடுப்பூசி போட வந்த மருத்துவக் குழுவினரிடம் தடுப்பூசி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார் .

இதில் 283 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது முகாம் துவக்க நிகழ்ச்சியில் கலவைப் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், திமிரி மருத்துவ அலுவலர் ஆர்.சரவணன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, விஏஒகள் சுகுமார் .ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்...

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!