2697 மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கினார்

2697 மகளிர் குழுக்களுக்கு நலத்திட்ட உதவி:  அமைச்சர் வழங்கினார்
X

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் காந்தி

ஆற்காட்டில் 2697 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன், நல உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலதிட்ட உதவிகள் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தைச்சேர்ந்த 1730 மகளிர் குழுவினருக்கு ரூ,105கோடி வங்கிக்கடன் மற்றும் நலதிட்டங்கள் வழங்கினார். விழாவில், முதல்வர் காணொளி காட்சி வாயிலாக 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுய உதவிக் குழுவினர்களுடன் கலந்துரையாடினார். .

இந்நிலையில் , இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு திருமண மண்டபத்தில் மாவட்டதைச் சேர்ந்த மகளிர் குழுவினர் , முதல்வரின் காணொளிக்காட்சி உரையாடலில் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, கைத்தறிமற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி சுயஉதவிக் குழுவினருக்கு வங்கிக்கடன் உதவி,நல உதவிகளை வழங்கினார்.

அதில் ,மாவட்ட முழுவதும் உள்ள 2697 மகளிர்குழுக்களைச் சேர்ந்த 34827, உறுப்பினர்களுக்கு ரூ115.82 கோடி வங்கிக்கடன் மற்றும் நல உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில். இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் எம்எல்ஏக்கள் முனிரத்தினம், ஈஸ்வரப்பன், திட்ட இயக்குநர் ஊரகம், மகளிர் திட்டம் லோகநாயகி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெயந்தி, ஒன்றியக் குழுத்தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி