Begin typing your search above and press return to search.
திமிரியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
திமிரி பேரூராட்சியில் ரூ.4 கோடியில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்
HIGHLIGHTS

திமிரி புதிய பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளுக்கு அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சியில், ஆரணி சாலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நவீன புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதனையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன்., பேரூராட்சி உதவி இயக்குனர் ஜிஜாயாய், பேரூராட்சி தலைவர் மாலா, துணைத் தலைவர் கவுரி தாமோதரன் இளஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், ஒன்றியக்குழு தலைவர் அசோக், உதவி செயற்பொறியாளர் அம்சா உள்பட பலர் உடனிருந்தனர்.