ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட திருமண மண்டபத்திற்கு சீல்

X
மாதிரி படம்
By - C.Vaidyanathan, Sub Editor |25 May 2021 10:34 PM IST
ஆற்காட்டில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆற்காடு தாசில்தார் காமாட்சி தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த மண்டபத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து மண்டபத்துக்கு 'சீல்' வைத்தனர்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu