கீழ்மின்னல் மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா

கீழ்மின்னல் மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா
X
இரத்தினகிரி அடுத்த கீழ்மின்னலில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது

இராணிப்பேட்டை மாவட்டம் இரத்தினகிரி அடுத்த கீழ்மின்னல் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா நடந்தது.

விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் விசேஷ அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அம்மனுக்கு பொங்கலிட்டு நேர்த்திக் கடன்களை செலுத்தி வழிபட்டனர்.

அதனைத்தொடர்ந்து, அம்மன் கரகம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கூழ்வார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு