ஆற்காட்டில் நடந்த போலி ஐடி ரெய்டில் கைதான நபர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது

ஆற்காட்டில் நடந்த போலி ஐடி ரெய்டில் கைதான நபர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது
X

குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைதான நரேந்திரநாத்

ஆற்காடு தொழிலதிபர் வீட்டில் போலி ஐடி ரெய்டு நடத்தி கைதானவரை குண்டர்தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்

ஆற்காடு தொழிலதிபர் வீட்டில் போலி ஐடி ரெய்டு நடத்தி கைதானவனை குண்டர்தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச்சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் கடந்த ஜூலை30ந்தேதி 6பேர் கொண்ட கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகளாக. நாடகமாடி ₹6லட்சம் கொள்ளையடித்துச் சென்றனர்.இதுகுறித்து தொழிலதிபர் கடந்த ஆகஸ்டு 5ந்தேதியன்று ஆற்காடு டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர் .

விசாரணையில், முதற்கட்டமாக சென்னையை சேர்ந்த, வருமான வரிதுறை ஊழியர் யாதவ், மற்றும் அதே பகுதி மது,,ஆற்காட்டை சேர்ந்தவர்கள் எழில், பரத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளியான நரேந்திரநாத் என்பவரை போலீஸார் கடந்த 18.09.2021 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் உத்தரவுப்படியும், இராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரபு மேற்பார்வையில், ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி தலைமையிலான தனிப்படை நரேந்திநாத் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்..அதில் ,நரேந்திரநாத் ஏற்கெனவே, சென்னை மதுரவாயல் காவல் நிலையப் பகுதியில் சி.பி.ஜ அதிகாரி போல நடித்து பணம் பறிப்பு போன்ற செயலில் ஈடுப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, இராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நரேந்திரநாத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க அடைக்க உத்தரவிட்டார்..

Tags

Next Story