Begin typing your search above and press return to search.
கலவை அரசு மருத்துவமனையில் இணை இயக்குநர் ஆய்வு
கலவை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS

கலவை அரசு மருத்துவமனை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அரசு மருத்துவம னையில் ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் வருகை பதிவேடுகளை பார்வையிட்டார். தீயணைப்பு பைப்புகள் எவ்வாறு செயல்படுகிறது என ஆய்வு செய்தார்.
மருத்துவமனையில் தேவையான மருந்துகள் , பணியாளர்கள் இருக்கிறார்களா என கேட்டறிந்தார்.
ஆய்வின்போதுமருத்துவ அலுவலர் டாக்டர் வெண்ணிலா, உதவி எழுத்தர் சக்திவேல் மற்றும் மருந்தாளுனர், செவிலியர்கள், தீயணைப்பு துறையினர் உடன் இருந்தனர்