/* */

ஆற்காடு திமுக தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு

திமுக தொழிலதிபர் சாரதிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஏராளான ஆவணங்களை கைப்பற்றினர்

HIGHLIGHTS

ஆற்காடு திமுக தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு
X

ஆற்காட்டை சேர்ந்த தொழிலதிபர் சாரதி

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டையைச்சேர்ந்தவர் சாரதி. ( 40), இவர், சிமென்ட் மொத்த வியாபாரம், கல் குவாரி, கட்டிட காண்டிராக்டர் ஆகிய தொழில்களை செய்து வருகிறார்.

தொழில் அதிபரான இவர் அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்துள்ளார். பின்பு ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து அமைச்சர் காந்தி முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தார். அத்துடன் ஊரக உள்ளாட்சித் தேர்தல்,மற்றும் நகரபுற உள்ளாட்சித்தேர்தலில் திமுகவெற்றி மிகக் கடுமையாகப் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 15 கார்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சகிதம் வருமான வரித்துறையினர், ஆற்காட்டில் உள்ள சாரதி வீடு, அலுவலகம், சிமெண்ட் குடோன் கடைகள், திமிறியருகே ஆனைமல்லூர் பாடியில் உள்ள கல்குவாரி,காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள படூர் குவாரி, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னை பெரியமேட்டில் உள்ள சாரதிவீடு மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள், பினாமிகள் என 28 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

வருமானவரி சோதனை நடைபெறும் சாரதிக்கு சொந்தமான வீடு

அதில் கணக்கில் வராத ஆவணங்கள் கைபற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட காலம் அதிமுக தொடர்பில் இருந்த இவர் தற்போது திமுகவில் சேர்ந்திருந்தாலும், இரு கட்சியிலும் அவரது பினாமிகள் உள்ளதால் அவர்கள் பட்டியலை சேகரித்து சோதனை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர்.

காலையில் தொடங்கிய சோதனைகள் தொடர்ந்து நடந்நது வருவதாலும் இரு கட்சி நிர்வாகிகள் உறவினர்களும் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Updated On: 2 March 2022 2:54 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்