அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் உமி தூசி: பொது மக்களுக்கு மூச்சுத்திணறல்
அரிசி ஆலை தூசி காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறும் பொதுமக்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் ,வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் .
இந்த நிலையில் அதே பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாடர்ன் ரைஸ்மில் இயங்கி வருகின்றது. அதிலிருந்து கடந்த சில மாதங்களாக நெல் அரவையின் போது உமி தூசிகள் வெளியேறி குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டாரங்களில் சூழ்ந்தும் படர்ந்தும் வருகிறது .
இதனால் அப்பகுதியில் வசித்து வரும் முதியவர்கள் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற உபாதைகளால் பாதிப்புக்குள்ளாகி அவதியடைந்து வருவதாக கூறுகின்றனர்..
மேலும், தூசிகள் அப்பகுதி வீடுகள், சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தூசி அடுக்குகளாக படர்ந்து அழுக்கடைந்து காணப்பட்டு வருகிறது .
இதனால் மக்கள் தாங்கமுடியாத வேதனையில் வீடுகளை விட்டு வெளியேறமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழலில் உள்ளதாக வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதியினர் பலமுறை திமிரி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டு வந்துள்ளதாகவும் ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் உள்ளதாக குறைகூறி வருகின்றனர்.
எனவே, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu