கைத்தறிப் பட்டு நெசவாளிகள் கஞ்சித்தொட்டி திறந்து ஆர்ப்பாட்டம்
வாழைப்பந்தலில் கஞ்சித்தொட்டி திறந்த கைத்தறி பட்டு நெசவாளர்கள்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த வாழைப்பந்தலில் கைத்தறிப்பட்டுநெசவுத் தொழில் செய்யும் குடும்பத்தினர் 500க்கும் மேற்பட்டோர்வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள பச்சையம்மன் நகரில் கடந்த 2003 ஆம் ஆண்டு குடிநீருக்காக பொதுக்கிணறு தோண்டப்பட்டது. பின்னர் அது பாதியிலே நிறுத்தப்பட்டது இதனால் கிணற்றைச்சுற்றி மண் சரிந்து பெரிய அளவில் பள்ளமாகியது. அதில் கடந்த சிலநாட்களாகப் பெய்த தொடர்மழையால் நீர்தேங்கி குட்டையானது
இதன் காரணமாக அப்பகுதியில் ஊற்று நீர் அதிகரித்து வீடுகளில் உள்ள தறி ஓட்டும் பள்ளங்களில் தண்ணீர் நிரம்பியுள்ளது. எனவே , கடந்த ஒருமாதமாக நெசவுத்தொழிலைத் அவர்கள் தொடர முடியாமல் வாழ்வாதாரம் இழந்து பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர்
இதனைத்தொடர்ந்து கடந்த 30 நாட்களாக கைத்தறிநூல் மற்றும் பட்டுநூல் உயர்ந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரம் இழந்து வரும் நிலையில் நெசவாளர்கள் செய்வதறியாது திகைத்துபோய் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் , தங்களது குடும்பங்கள் கஞ்சி குடிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசுக்கு சுட்டிகாட்டும் விதமாக கைத்தறிப் பட்டு நெசவாளர்கள் கஞ்சித் தொட்டியைத் திறந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu