கிணற்றில் தவறி விழுந்த சிறுமி: துரிதமாக மீட்ட தீயணைப்புப்படையினர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, கால் தவறி கிணற்றில் விழுந்த சிறுமியை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாமந்திபுரம் புதுக்காலனி தெருவைச் சேர்ந்த வெங்கடேசன். அவரது மகள் மேனகா (15), அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மாலை 6மணியளவில் அப்பகுதியில் உள்ள வயலில் மேனகா சென்ற போது, திடீரென மாடு ஒன்று சிறுமியைத் துரத்தியது. பயந்து ஓடிய சிறுமி மேனகா அங்குள்ள 75அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்ததால் சிறுமி மேனகா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

கிணற்றில் இருந்த பாறையைப் பற்றியபடி கூச்சலிட்டார். சிறுமியின் அலறலைக்கேட்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் வந்து் சிறுமியை மீட்க முயற்சியில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் ஆற்காடு தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்த சிறுமி லேசான காயத்துடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் திமிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர் .திமிரி போலீஸார், இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story