கலவையருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

கலவையருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு
X

கலவையருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையருகே விவசாயக் கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டனர்

ராணிப்பேட்டை மாவன்டம் கலவையடுத்த ஆயிரமங்கலம் கிராமத்தைச்சேர்ந்தவர் தேசிங்கு. அவருக்கு சொந்தமான பசு மாட்டை இன்று அங்குள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு கட்டிவிட்டுச்சென்றார். அப்போது அருகிலுள்ள 100அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து அலறியது.

அதைக்கேட்டு அங்கு ஓடி வந்த தேசிங்கு பசுமாடு கிணற்றில் விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஆற்காட்டிலுள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அங்கு வந்த மீட்புப்படையினர் கிணற்றில் விழுந்த பசுவை உயிருடன் மீட்டு உரிமையாளர் தெசிங்கிடம் ஒப்படைத்தனர். பசுவை உயிருடன் மீட்ட தீயணைபு மீட்புபடையினரின் செயலைக்கண்ட அக்கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்

Tags

Next Story
ai future project