தொடர்மழையால் பல ஏக்கர் நெற்பயிர் சேதம்; விரக்தியில் விவசாயிகள்

தொடர்மழையால் பல ஏக்கர் நெற்பயிர் சேதம்; விரக்தியில் விவசாயிகள்
X

அறுவடைக்கு தயாரான நெல் வயலில் பாயும் மழைநீர் 

கலவை சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்மழையால் பல ஏக்கர் நெற்பயிர் நீரில் முழ்கி சேதமானதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங் களில் கடந்த சிலநாட்காளாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதில் மழை, இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து பெய்துவருகிறது.

இந்நிலையில் கலவை தாலூக்காவில் உள்ள 60 கிராமங்களில் கலவை, நல்லூர், மேல்நெல்லி, பரிக்கல்பட்டு, பென்னகர், சென்னசமுத்திரம், மற்றும் வாழப்பந்தல் உட்பட பலகிராமங்களில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட விளைநிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.

தற்போது அவை அறுவடைக்குத் தயாரான சூழலில் தற்போது பெய்துவரும் தொடர்மழையால் மழைநீர் விளைநிலங்களில் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கி சேதமாகின. இதனைக்கண்டு விவசாயிகள் பெரும் வேதனையடைந்து உள்ளனர்.

மேலும் தற்போது நெற்பயிரிடும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் நெல் விலை போகாமல் உள்ளது. இருப்பினும் ஏக்கருக்கு ரூ30ஆயிரம் முதல்40ஆயிரம் வரைக்கும் செலவுசெய்து வந்து பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்து வருகின்றனர். எனவே அரசு, விவசாயிகளின் பேரிழப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture