வாழைப்பந்தல் அருகே குழந்தையில்லாத ஏக்கத்தில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

வாழைப்பந்தல் அருகே குழந்தையில்லாத ஏக்கத்தில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

வாழைப்பந்தல் அருகே ஆரூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் குழந்தையில்லாத ஏக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..

ராணிப்பேட்டை மாவட்டம், கலைவை அடுத்த வாழப்பந்தல் அருகே உள்ள ஆரூரைச் சேர்ந்தவர் வெங்கட் ,28 . விவசாயி. இவருக்கு மஞ்சுளா என்பவருடன் திருமணமாகி 3வருடங்களுக்கு மேலாகிறது.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்கின்ற ஏக்கத்தில் வெங்கட் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல, இரவு குடித்துவிட்டு போதையில் வந்த வெங்கட் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்பு அறைக்குள் சென்று தாள் போட்டு கொண்ட அவர், காலையில் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், மஞ்சுளா அச்சத்தில் அக்கம்பக்கத்தினருடன் அறைக்கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது கணவன் மின் விசிறியில் தூக்கிட்டுபிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளார் .

பின்னர இது குறித்து வாழப்பந்தல் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
the future of work and ai