ஆற்காடு நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றிய தி.மு.க

ஆற்காடு நகரமன்ற தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றிய  தி.மு.க
ஆற்காடு நகரமன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது

ஆற்காடு நகராட்சிக்கு நடைபெற்ற வார்டு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. 18 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், பா.ம.க. 3 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தலைவர், துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தேவி பென்ஸ்பாண்டியன், அ.தி.மு.க. சார்பில் கீதாசுந்தர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 26 வாக்குகள் பெற்று தேவி பென்ஸ்பாண்டியன் வெற்றி பெற்றார்.

மாலை நடைபெற்ற துணைத்தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் டாக்டர் பவளக்கொடி சரவணன், அ.தி.மு.க. சார்பில் உதயகுமார் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் டாக்டர் பவளக்கொடி சரவணன் 26 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தலைவராக தேர்வு செய்யப்பட்ட தேவி பென்ஸ்பாண்டியன், துணைத்தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன் ஆகியோருக்கு நகராட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்

Tags

Read MoreRead Less
Next Story