பக்தர்கள் மாலையணிந்து க்ஷடாரண்ய ஷேத்திரங்களில் சிறப்பு வழிபாடு
வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோயிலிலிருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் க்ஷடாரண்ய ஷேத்திரங்களுக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் க்ஷடாரண்ய ஷேத்திரங்களில் ஒன்றாக விளங்கி வரும் ஆற்காடு அடுத்த வேப்பூர் பாலாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் சிவ மாலையணிந்து 11நாட்கள் விரதமிருந்து வந்தனர்..
அதனைத்தொடர்ந்து பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து க்ஷடாரண்ய ஷேத்திரங்களுக்கு சாமி தரிசனம் செய்ய பாதயாத்திரையாகப் புறப்பட்டனர்.
பாதயாத்திரையில் க்ஷடாரண்ய ஷேத்திரங்களாக கூறப்பட்டு வரும் மேல்விஷாரம் வடிவுடையம்மை சமேத வால்மீகிஸ்வரர் கோயில், அவரக்கரை பர்வதவர்த்தின காசியப்ப ஈஸ்வரர், காரை கிருபாம்பிகை சமேத கவுதமேஸ்வரர் ,வன்னிவேடு புவனேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர், குடிமல்லூர் திரபுரசுந்தரி சமேத அத்தீஸ்வரர்,மற்றும் புதுப்பாடி தர்மசவர்த்தினி சமேத பரத்வாஜேஸ்வரர் ஆகிய கோயில்களுக்குச் சென்று பக்தியுடன் சிறப்பு வழிபாடுகளுடன் தங்கள் விரதங்களை நிறைவு செய்வர் .
கடந்த 21 ஆண்டுகளாக இந்த பக்தர்கள் மாலையணிந்து பாதயாத்திரையாக க்ஷடாரன்ய ஷேத்திரங்கள் சென்று சிறப்பு வழிபாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu