கொசுக்களின் கூடாரமான கழிவு நீர் கால்வாயை சீரமைக்க கோரிக்கை.

தூர் வாரப்படாமல் இருக்கும் கழிவுநீர் கால்வாய்
இராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் சுமார்15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். அதில் சென்னசமுத்திரம் செல்லும் பிரதான சாலை கலவையிலுள்ள புகழ்பெற்ற கமலக் கன்னியம்மன் கோயில் , அங்காளம்மன்கோயில் மற்றும் முருகன் கோயில் ஆகியவற்றிற்கு செல்லும் முக்கிய சாலையில் உள்ளது. மேற்படி சாலையில் எப்போதுமே உள்ளூர்,வெளியூர் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந்த கழிவுநீர்க் கால்வாய் பலமாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது.கழிவுநீர் தேங்கி அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதாகவும் தொற்று நோயைபரப்பும் கொசுக்களின் கூடாரமாக இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர்.
இதுதொடர்பாக கலவை மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கால்வாயை தூர்வாரி சீரமைக்கவேண்டி கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடவடிக்கை ஏதுமின்றி அப்படியே கழிவுநீர்தேங்கி துர்நாற்றம் வீசிவருவதாக கூறப்படுகிறது.
எனவே கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ள கால்வாயை விரைந்து சீரமைத்திட கலவைப் பொதுமக்கள் , சம்பந்தபட்ட பேரூராட்சி உயரதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu