ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த டிரைவர் சாவு

ஆற்காடு அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த டிரைவர் சாவு
X

பைல் படம்.

ஆற்காடு அடுத்த அனந்தாங்கலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த டிரைவர் பலியாகினார்.

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த அனந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் 21. இவர் தற்காலிக டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் காலை அவரது வீட்டலிருந்து பசு மாட்டை மேய்பதற்காக அதே ஊரிலுள்ள கோவிந்த மந்திரி என்பவரது நிலத்தின் அருகே சென்றார்.

அப்போது கீழே அறுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியை அவர் கவனிக்காமல் மிதித்துள்ளார். இதனால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

இது குறிந்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!