அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரி நீர் வெளியேறி பயிர்கள் சேதம்: கிராம மக்கள் வேதனை
உடைந்த மதகை பார்வையிடும் எம்எல்ஏ ஈஸ்வரப்பன்
இராணிப்பேட்டை மாவட்டம் ,ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கேபிதாங்கல் ஏரியில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்நிரம்பி கோடி போனது.
இதனால், முப்போகமும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்ற மகிழ்ச்சியில் கிராம மக்கள் நம்பிக்கைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஏற்கனவே பலவீனமாக இருந்த மதகு உடைந்து ஏரியிலிருந்து தண்ணீர் வெளியறி்யது . இதனால் ஏரியொட்டியுள்ள விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டும் மூழ்கி சேதமானது.
இதுகுறித்து., கிராம்மக்கள் கூறுகையில், தங்கள் கிராமத்தில் உள்ள ஏரிக்கு ஆற்று நீர்வரத்து கால்வாய் இல்லாத நிலையில் கனமழைப் பெய்தது காரணமாகவே கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரியில் நிரம்பியதாக கூறினர். ஏரி நிரம்பியதால், மக்கள் மகிழ்ச்சியடைந்ததாகவும் ஆனால் தங்கள் நம்பிக்கை பறிபோனதாகவும் தெரிவித்தனர்.
மேலும். அவர்கள் மழைக்கு முன்போ அல்லது மழையின் போதோ சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் வந்து முறையாகப் ஏரியைப் பார்வையிடாமல் போனதன் காரணமாகவே பலகீனமாக இருந்த மதகை உடைந்து ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாகியது என்றும், அதிகாரிகள் ஏரிக்கு வந்து மதகை பார்வையிட்டு சரி செய்திருந்தால் இவ்வாறு தண்ணீர் வீணாகியிருக்காது என்று ஆதங்கத்துடன் வேதனைத் தெரிவித்துள்ளனர்..
இந்நிலையில் தகவலறிந்த ஆற்காடு தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரப்பன் அப்பகுதிக்குச் சென்று உடனே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து ஏரியிலிருந்து வேளியேறும் தண்ணீரைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu