தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலே ஆதாரை மட்டும் பதிந்திடும் தில்லாலங்கடி வேலை
தமிழக அரசு கொரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதிலும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த பகுதி சுகாதாரத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் பலரின் ஆதரவுடன் சிறப்பு முகாம்களை் அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
அவற்றை அமைச்சர்கள், உயர்மட்ட அதிகாரிகளான துறை செயலர்கள் இயக்குநர்கள் மாவட்ட ஆட்சியரகள் பார்வையிட்டு வருகின்றனர் . தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு அடையாளமாக ஆதார் எண் பதிவேற்றம் செய்யப்படுறது.
இந்நிலையில் அரசு அறிவித்த ஊரடாங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தற்போது மாணவர்களின் எதிர்கால கல்வி நலனைக் கருதி அரசு படிப்படியாக பள்ளிகள் செயல்பட அனுமதித்து அறிவித்து வருகிறது. அதன் காரணமாக பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசியினை போட்டு வருகின்றனர் அதில் சிலர் தடுப்பூசி போடும் மையங்களுக்குச் சென்று அங்குள்ள கணிணி ஆப்ரேட்டர் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் நைசாகப் பேசி தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலேயே, ஊசி போட்டதாக ஆதார் எண்ணை மட்டும் பதிவுசெய்து விட்டு எஸ்கேப் ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் அவர்களுக்கு ஆதரவாக, மருத்துவ ஊழியர்களும் கணக்கிற்காக பதிவு செய்து மருந்தை வெளியில் பீய்ச்சிவிடுவதாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசி திட்டம் மற்றும் தடுப்பூசி போட்டால் பரிசு என்ற தன்னார்வலர்களின் சேவை என்று கொரோனாவை ஒழிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் எதிர்கால சமூதாயத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் குருவானவர்களே இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது வேதனையளிக்கிறது.
எனவே அரசு தடுப்பூசி மையங்களை ஒழுங்குபடுத்தி, சிசிடிவி கண்காணிபை பொருத்தி அதனை ஆய்வு செய்ய வேண்டுமெனவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலேயே ஆதார் எண்ணை பதிவிடக்கோருவோர் மீதும் அதற்கு ஆதரவாக செயல்படும் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu