பசுமை மாரத்தான் போட்டி: கலெக்டர் துவக்கிவைப்பு

பசுமை மாரத்தான் போட்டி:  கலெக்டர் துவக்கிவைப்பு
X

பசுமை மராத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் 

கலவையில் பசுமையை வலியுறுத்தி நடைபெறும் மாரத்தான் போட்டியை . மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்

இராணிப்பேட்டை மாவட்டம் கலவையடுத்த மாம்பாக்கம் அரசுப்பள்ளியில் படித்த எதிர்காலத்தோழர்கள் சங்கம் சார்பில் பசுமையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் நோக்கில் 9ஆம் ஆண்டு மாரத்தான் போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் துவக்கி வைத்தார்

போட்டியானது கலவை தாலுகா அலுவலகம் தொடங்கி மாம்பாக்கம் கூட்ரோடு வரை 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.

முதல் பரிசாக ரூ 10, 111 , 2வது பரிசாக ரூ,9, 999 மற்றும் 3வது பரிசு 8,888 ஆகியவற்றை கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் வழங்கினார்

Tags

Next Story
ai marketing future