தூய்மைஇந்தியா, ரொக்கமில்லா பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தூய்மைஇந்தியா, ரொக்கமில்லா பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி.
X

மாங்காடு ஊராட்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி 

ஆற்காடு அடுத்த மாங்காட்டில் மத்திய அரசின் தூய்மை இந்தியா, கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே புதிய மாங்காடு ஊராட்சியில் மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், கொரானா தடுப்பூசி, தூய்மை இந்தியா, ரொக்கமில்லா பரிவர்த்தனை, மற்றும் பிரதமரின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் திருமதி புவனேஸ்வரி,தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிகள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டது. மேலும் ,கொரானா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியும் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாங்காடு கிராம ஊராட்சி தலைவர் கண்ணகி முன்னிலை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் ஆலேயம்மா ஆபிரகாம் , வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு களஅலுவலர் ஜெயகணேஷ் ,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அருண் குமார் , முதியோர் பாதுகாப்பு மைய அலுவலர் சுந்தரமூர்த்தி, ஆற்காடு மருத்துவ அலுவலர் கோபிநாத் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி, கிராமங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. அதனை கிராமங்களில் உள்ள மக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற மத்திய அரசு மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது தனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிராமங்களில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 100% தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கூறினார் .

விழாவில் பேசிய மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் ஆலேயம்மா ஆபிரகாம் , மத்திய மாநில அரசுகள் வழங்கும் மானிய திட்டங்கள் அனைத்தும் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதால் அனைவரும் வாங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் எனக் கூறினார்.

ஆண்டுக்கு 12 ரூபாய்,செலுத்தும் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா காப்பீடு திட்டம்,மற்றும்ஆண்டுக்கு ரூபாய் 330 செலுத்தும் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீடு திட்டங்களில் இணைந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்

மேலும்.60 வயதுக்கு பிறகு ஓய்வு ஊதியம் பெற விரும்புபவர்கள், கூலித் தொழிலாளர்கள்,விவசாயிகள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் , அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுமாறும் அவர் கூறினார்.

நிகழ்ச்சி நிறைவாக ஊராட்சி மன்ற செயலர் கபாலி நன்றி கூறினார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!