/* */

ரூ1 லட்சம் தந்தால் தினசரி 1கிராம் தங்கம்: பலே ஆசாமி கைது

ஆற்காட்டில் ரூ1 லட்சம் தந்தால் தினமும் 1 கிராம் தங்கக் காசு அளிப்பதாகக் கூறி தராமல் ஏமாற்றி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர் .

HIGHLIGHTS

ரூ1 லட்சம் தந்தால் தினசரி 1கிராம் தங்கம்: பலே ஆசாமி கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சடையாய் தெருவைச்சேர்ந்தவர் சுரேஷ்பாபு (47). இவர் கடந்த 2ஆண்டுகளாக அப்பகுதியில் ரூ,1 லட்சம் தந்தால் தினமும் 1 கிராம் அளவுக்கு தங்கக்காசு வழங்குவதாக ஆசைவார்த்தைக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளார்.

அதில், ஆற்காடு தாஜ்புராவைச் சேர்ந்த திருநாவுக்கரசு ரூ,7லட்சமும்,செல்வம் என்பவர் ரூ,20 லட்சம், ஜமீல்பாஷா ரூ,3லட்சம், ராமு ரூ2 லட்சம் என பலரும் சுரேஷ்பாபுவிடம் லட்சக்கணக்கில் கொடுத்துள்ளனர்.

ஆனால், சுரேஷ்பாபு, சொன்னபடி யாருக்கும் தங்கக்காசை வழங்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு அவர் ,பணத்தை ஷேர்மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளதாகவும் பணத்தைத் திருப்பித்தர காலதாமதாகும் என்று கூறியதாக தெரிகிறது. .

இதனையடுத்து திருதாவுக்கரசு ,செல்வம், ஜமீல்பாஷாமற்றும் ராமு ஆகியோர் ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் சுரேஷ்பாபு மீது புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரித்த போலீசார் சுரேஷ்பாபுவை கைது செய்து சிறையிலடைத்தனர்..

Updated On: 5 Dec 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  4. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  8. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  9. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  10. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...