ஆற்காடு அருகே கிணற்றில் கார் கவிழுந்து ஐ.டி., ஊழியர் பரிதாப உயிரழப்பு

ஆற்காடு அருகே கிணற்றில் கார் கவிழுந்து ஐ.டி., ஊழியர் பரிதாப உயிரழப்பு
X

கிணற்றில் விழுந்த இருவரை மீட்கும் தீயணைப்புத்துறையினர்.

ஆற்காடு அருகே விளாப்பாக்கத்தில் கிணற்றில் கார் கவிழுந்து விபத்துக்குள்ளானதில் ஐ.டி., ஊழியர் பரிதாப உயிரழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு குட்டக்காரத் தெருவைச் சேர்ந்தவர் கோபி(40) ,ஐடி கம்பெனி ஊழியர். திருமணமாகி மனைவி மற்றுமு் பிள்ளைகளுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில், கோபி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ராணிப்பேட்டை மாந்தாங்கலைச் சேர்ந்த டிரைவர் தினேஷ் என்பவருடன் காரில் திமிரி அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றார்.

அங்கு அவரது குடும்பத்தினரை இறக்கிவிட்ட பின்பு கோபி தானே காரில் அமர்ந்து டிரைவர் தினேஷுடன் காரை பின்னால் நகர்த்தினார். .அப்போது பின்புறமாகவே சென்ற கார், துரதிர்ஷ்டவசமாக அருகிலிருந்த இருந்த 70அடி ஆழ கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதனைக்கண்ட அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து காரிலிருந்த இருவரையும் காப்பாற்ற முயற்சித்தனர். இருப்பினும் கோபி பரிதாபமாக பலியாகினார். தினேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திமிரி போலீஸார் ஆற்காடு தீயணைப்பு மீட்பு படையினருக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் கோபால் தலைமையிலான மீட்புபடையினர் தினேஷையும், கோபியின் சடலத்தையும் மீட்டனர். இதனையடுத்து திமிரி போலீஸார் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
importance of ai in healthcare