மாடு மீது கார் மோதி விபத்து: தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்
ஆற்காட்டில் மாடு மீது மோதி நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.
ஆற்காட்டில் மிரண்டு ஓடிய மாடு மீது மோதிய கார் நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்ததில் தனியார் கம்பெனி ஊழியர் படுகாயமடைந்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் காலை வரதராஜ பெருமாள் கோயிலருகே செய்யாறு சாலையில் படுத்திருந்த மாடு ஒன்று திடிரென எழுந்து மிரண்டு ஓடியது. அப்போது எதிரே வந்த கார் மாடுமீது மோதி நிலைதடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து அங்கு வந்த ஆற்காடு போலீஸார். காருக்குள்ளிருந்த நபரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டிவந்தது திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பசும்பொன் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பதும், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருவதாக தெரிய வந்தது.
மேலும் பெங்களூருக்கு போகும்போது விபத்து நடந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் சாலையின் குறுக்கே கரப்பான் பூச்சி போல கவிழ்ந்திருந்த காரை கிரேன் மூலம் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும், அடிக்கடி கால்நடைகளால் ஏற்படும் இது போன்று நடக்கும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கையை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu