/* */

மாங்குப்பத்தில் களைகட்டியது எருது விடும் திருவிழா

ரத்தினகிரி அருகே மாங்குப்பம் பொன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50 ம் ஆண்டு எருது விடும் திருவிழா விமரிசையாக நடந்தது.

HIGHLIGHTS

மாங்குப்பத்தில் களைகட்டியது எருது விடும் திருவிழா
X

எருது விடும் திருவிழாவில் சீறிப்பாயும் காளை 

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மாங்குப்ப கிராம தேவதையான பொன்னியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் மயிலேறு தினத்தன்று கோலாகலமாக நடந்து வருகிறது . விழாவில் கடந்த 50ஆண்டுகளாக காளைவிடும் நிகழ்ச்சி புகழ்பெற்ற விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் வழக்கம்போல எருது விடும் திருவிழா வெகுவிமரிசையாக நடந்த்து. விழாவில் ராணிப்பேட்டை வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் 500 க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டது .

காளைகளை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்த பின்பு அனுமதித்தனர். ஒவ்வொரு காளையையும் மூன்று சுற்றுகள் ஓடவிட்டு சராசரி நேரத்தை கணக்கிட்டு முடிவுகள் அறிவிக்கப் பட்டன. போட்டியில் வென்ற காளைகளுக்கு முதல்பரிசாக 1,லட்சம் ரொக்கம், என மொத்தம் 16 பரிசுகள் வழங்கப்பட்டன.

திருவிழாவில், ஊர்பொதுமக்கள், காளைகளின் உரிமையாளர்கள் , பார்வையாளர்கள் என திரளானோர் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்த காளைகளைக்கண்டு ரசித்தனர்.

Updated On: 22 Jan 2022 2:34 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?