குடிபோதையில் தாயை தாக்கிய அண்ணன் அடித்துக்கொலை; தம்பி தலைமறைவு
கொலை செய்யப்பட்ட தேவநாராயணன்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த காவனூர் காந்தியார் தெருவைச் சேர்ந்தவர்,லட்சுமி(60) பெருமாள்68, தம்பதியினருக்கு7 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
லட்சுமியின் கணவர் இறந்த நிலையில், திருமணமாகாத அவரது மகன் தேவநாராயணன்(38), கணபதி(22) அவருடய தம்பி ஆகிய 4 பேர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தேவநாராயணன் தினமும் குடித்துவிட்டு வந்து தாய் லட்சுமியிடம், தகாத வார்த்தைகள் பேசி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல தேவநாராயணன் குடித்துவிட்டு போதையில் தன் தாயிடம் சண்டையில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த தம்பி கணபதி அண்ணனை எச்சரித்துள்ளார்.
உடனே ஆத்திரமடைந்த தேவநாராயணன் கணபதியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கணபதி, வீட்டில் இருந்த கத்தியால் அண்ணனை சரமாரியாக குத்தினார். கீீீீீழே சரிந்து விழுந்த வேதநாராயணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கணபதி பயத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திமிரி போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து அறிந்த ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பிரபு அங்கு வந்து விசாரணை செய்தார். தப்பி ஓடிய கணபதியை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்..
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu