ஆற்காட்டில் பைக் திருட்டு: 2பேர்கைது

ஆற்காட்டில் பைக் திருட்டு: 2பேர்கைது
X

கைது செய்யப்பட்ட 2பைக் திருடர்கள்.

ஆற்காட்டில் போலீசாரின் வாகன சோதனையில் பைக் திருடர்கள் 2பேர் கைது செய்யப்பட்டனர்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பைக் திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும்படி இராணிப்பேட்டை எஸ்பி தீபாசத்தியன் உத்தரவிட்டுள்ளார். எனவே, கூடுதல் எஸ்பி முத்துகருப்பன் மேற்பார்வையில் , ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் ஆற்காடு மற்றும் பல்வேறு இடங்களில் பைக் திருடர்கள் குறித்து விசாரித்து தேடிவந்தனர்.

இந்நிலையில் போலீஸார், ஆற்காடு கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக்கை மடக்கி அதில் வந்த இருவரிடமும் விசாரித்தனர்.

விசாரணையில் இருவரும் ஆற்காடுபகுதியைச் சேர்ந்த பாலாஜி(20), ஆகாஷ் (20), என்பதும் அவர்கள்,ஆற்காடு இரத்தினகிரி ஆகியபகுதிகளில் பைக்குகளை திருடிவந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் பாலாஜி, ஆகாஷ் இருவர் மீது வழக்குப்பதிந்து தீவிர விசாரணை செய்தனர்

அதில் 4பைக் மற்றும் 1செல்போனை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். பின்பு இருவரையும் கைது சிறையிலடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!