ஆற்காட்டில் ஆசிரியர்களுக்கு 'நல்லாசிரியர் விருது' வழங்கல்

ஆற்காட்டில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கல்
X

ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கி , அமைச்சர் காந்தி  பாராட்டினார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், நல்லாசிரியர் விருது வழங்கி, அமைச்சர் காந்தி பாராட்டினார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் 10, ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை நல்லாசிரியர்களாக தேர்வு செய்து அறிவித்தது.

அதன் பேரில் அவர்களுக்கு விருது வழங்கும் விழா, ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் தலைமை தாங்கினார். அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் வரவேற்றார், மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி, நல்லாசிரியர் விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!