கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கை தேவை: தமிழிசை

ரத்னகிரி கோவிலுக்கு வந்திருந்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த இரத்தினகிரியில் பாலமுருகன் கோயில் அறங்காவலர் மற்றும் நிர்வாகியுமான பாலமுருகனடிமை சாமிகளின் 55வது ஆண்டு மெய்ஞானவிழா நடந்தது .
விழாவில் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்பு பாலமுருகனடிமை சாமிகளிடம் ஆசிபெற்றார். .
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே நாம் அனைவரும் தடுப்பு விதிகளான முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடிக்கவேண்டும். 60 வயதுள்ளவர்கள் பூஸ்டர் ஊசி போடவேண்டும். முதன்முதலாக 12 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் கொரோனா தடுப்பூசிப்போட்டுக் கொண்டு எச்சரிக்கையிடன் இருக்கவேண்டும் என்றார்
தமிழகமீனவர்கள் மீது இலங்கை அரசின் தாக்குதல் குறித்து கேட்டதற்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். உக்ரைன் தாக்குதலில் பாதிப்புகளின்றி நம்மவர்களை பத்திரமாக மீட்ட பெருமைக்குரியவர். பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் வெளியுறவு அமைச்சர் இந்த விஷயத்தில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறினார்.
முன்னதாக கோயிலுக்கு வந்த அவரை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் எஸ்பி தீபாசத்தியன் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu